tamilnadu

img

விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் ரேசன் கடை அமைத்திடுக! 

அரியலூர், ஜூலை 9-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, ஆமணக்கந்தோண்டி கிராமத்திற்கு ரேஷன் கடை மற்றும் கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் எஸ். துரைசாமி, மாவட்டச் செயலாளர் மணிவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்டக் குழு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஆமணக்கந்தோண்டி கிராமத்திற்கு புதிய ரேஷன் கடை, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைத்துக் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை மற்றும் மூடிக் கிடக்கும் நூலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.