திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளம்
வழக்குப் பதிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?'
மயிலாடுதுறை, ஆக.27- மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரில் அமைந்துள்ள அமிர்தகடேஸ் வரர் ஆயலத்தை தருமபுர ஆதீனம் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. அந்த ஆலயம் 365 நாட்களும் பரபரப்பாகவே காணப்படும். பல்வேறு பகுதிகளி லிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆலயத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. தொடர்ந்து புதிதாக தங்கும் விடுதிகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த அமிர்தகடேசுவரர் ஆலயத்தி னுள் நுழைந்தால் பல்வேறு சன்னதி களில் பூஜைக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவாகும். ஆலயத் திற்குள் பூஜை நடத்துவதற்கு ஆலயம் ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. ரூ.4000-ஐ ஆலய நிர்வாகம் வாங்கிக் கொண்டு ரூ.2000-க்கு மட்டுமே ரசீது வழங்கி வருகிறது. ரூ.2000-க்கு எந்த ரசீதும் இல்லை. கோவிலுக்குக் கிடைக் கும் வருமானத்தை விட தனிநபர்கள் அடிக்கும் வருமானம், நாள் ஒன்றுக்கு பல லட்சத்தை தாண்டிவிடும். திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம், பூஜைகளின் வகைகள் - இவற்றை அமிர்தகடேசுவரர் ஆலயம் அறிவித்தது போன்று 20-க்கும் மேற் பட்ட இணையதளங்களை (Websites) போலியாக உருவாக்கி. அவரவர் தனி யாக வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வா கம், இதுபோன்ற போலி இணைய தளங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவில் கண்காணிப்பாளர் மணி என்பவர் மூலம் ஆன்-லைன் புகாரை 30.11.2022 அன்று அனுப்பியது. அதை ஓராண்டாக ஆய்வு செய்த மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீ சார், கோவில் கண்காணிப்பாளர் மணியை வரவழைத்து கடந்த 16.10.2023 அன்று எழுத்துப்பூர்வமாக புகாரை எழுதி வாங்கினர். அதில், திருக்கடையூரைச் சேர்ந்த குறிப்பிட்ட 8 பேர் போலி வெப்சைட் வைத்து வங்கிக் கணக்கில் ஏமாற்றி வருகின்றனர் என்றும், இதுபோன்று 20-க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்டு கள் இயங்கி வருகின்றன என்றும் தெரி விக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உண்மை என்று விசாரணையில் உறுதி யானதால், இந்திய தண்டனைச் சட்டம் 467, 468, 471, 420 மற்றும் தகவல் தொழில் நுட்ப திருத்தச் சட்டம் 2008-ன்படி 66சி, 66டி ஆகிய சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர், வழக்குப் பதிந்து இரண்டு ஆண்டு களாகியும், வழக்கில் உள்ளவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை; மேலும் ஜாமீன்கூட எடுக்கவில்லை. இந்த வழக்கில் என்ன நடந்தது? ஏன் இதுவரை அவர்கள் கைது செய்யப்பட வில்லை? ஜாமீன்கூட எடுக்காமல் இருப்பதற்கும், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அமைதி காப்பதற்கும் காரணம் என்ன? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருக்கடையூர் கோவில் பெயரில் போலி இணையதள விவகாரம் குறித்து செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.