tamilnadu

கீழத் தாயில்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

கீழத் தாயில்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

வெம்பக்கோட்டை, செப்.3- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உள்ள கீழத்தாயில்பட்டி யில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.     வெம்பக்கோட்டை அருகேயுள்ளது கீழத் தாயில்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான குயில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் சுமார் 300க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று காலை வழக்கம் போல ஆலைக்கு வந்த தொழி லாளர்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதிப் பொருட்களில் ஏற்பட்ட திடீர் உராய்வு காரணமாக வெடி  விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், சுதா ரித்துக் கொண்ட தொழிலாளர்கள் அங்கி ருந்து தப்பியோடினர்.  இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது. இந்த விபத்தில் ஒரு அறை மட்டும் சேதமானது.   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.