tamilnadu

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் வெடி விபத்து

சிவகாசி அருகே  பட்டாசுக் கடையில்  வெடி விபத்து

சிவகாசி, அக்.5- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ளது அனுப்பங்குளம். இங்குள்ள மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்குச் சொந்தமான சி.எஸ்.கே பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்நிலை யில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு   பட்டாசுகளை வாங்க கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். புதியரக வெடி ஒன்றை வெடித்துக் காண்பிக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். இதையடுத்து, கடையில் இருந்த விற்பனை யாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பரிசோ தனை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவித மாக கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசு கள் மீது தீப்பொறி பற்றியது. இதையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற் பட்டது. அடுத்தடுத்து அனைத்து பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கின. தகலறிந்து விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.