சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் பலி
சிவகாசி, ஜூலை 21- சிவகாசி அருகேயுள்ள ஆண்டியா புரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் திங்களன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயத்து டன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே உள்ளது ஆண்டி யாபுரம் கிராமம். இங்கு சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான மாரியம் மாள் பட்டாசு ஆலை உள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது ஒரு அறையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதையடுத்து, அருகில் உள்ள அறைகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சிவகாசி அருகேயுள்ள முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்த சிவசாமி மனைவி சங்கீதா(42), குருசாமி என்பவரது மனைவி லட்சுமி(45), தங்கராஜ் என்பவ ரது மகன் கார்த்திக் செல்வம்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த கார்த்திக் செல்வத்தின் தாயார் மாரியம்மாள்(67), முனியசாமி என்பவரது மனைவி நாகலட்சுமி(55), முத்துவேல் என்பவ ரது மனைவி மாரியம்மாள்(53) ஆகி யோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயினை வேறு பகுதிகளுக்கு பரவ விடாமல் போராடி தடுத்து நிறுத்தினர். காய மடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக சிவகாசி யில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலைக்கு தீய ணைப்பு, வருவாய் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். விபத்து நடந்த தொழிற்சாலை யின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.