ஒவ்வொரு கட்சிக் கிளையும் வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்
கீழ்வேளூர், ஆக. 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு சார்பில் கீழ்வேளூர் தொகுதி இடைக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் கள் கூட்டம் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், மாநி லக்குழு உறுப்பினர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்பிரமணியன் மற்றும் பி.சுபாஷ்சந்திர போஸ் ஆகியோர் உரை யாற்றினர். தொகுதியில் உள்ள கள நிலவரம் குறித்து இடைக்கமிட்டிகள் குழு சார்பில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆற் றிய சிறப்புரையில்,”இந்த 5 ஆண்டுகள் மற்றும் இதற்கு முந்தைய 5 ஆண்டுகள் ஆக மொத்தம் 10 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பி.நாகை மாலி சட்டமன்ற உறுப்பி னராக இருந்து கீழ்வேளூர் தொகுதியில் சிறப்பாக பணி செய்துள்ளார். இத் தொகுதியில் உள்ள ஒவ் வொரு கிராமமும் நமது சட்ட மன்ற உறுப்பினரின் பணிக ளால் பயன் பெற்றுள்ளது. அதனை இத்தொகுதி மக்க ளுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். கீழ் வேளூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 163 கட்சிக் கிளைகள் செயல் படுகின்றன. மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு முடி வின் அடிப்படையில் ஒவ் வொரு கட்சி உறுப்பினரும், ஒவ்வொரு கட்சிக் கிளையும் வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும், கட்சி விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.