tamilnadu

அங்கன்வாடி மையங்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட நிதி இல்லை

அகில இந்திய அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் கூட்டமைப்பின் (AIFA WH) பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து ஒன்றிய பட்ஜெட் 2025-26 குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில்,”14 லட்சம் அங்  கன்வாடி மையங்களில் 2 லட்சம் மையங்களை மேம்படுத்த 2022இல் அறி விக்கப்பட்டது. ஆனால் இன்று வரை 1  லட்சத்திற்கும் குறைவான மையங்க ளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3.38 லட்சம் மையங்களில் சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 4.61  லட்சம் மையங்களில் கழிப்பறை வசதி  கூட இல்லை. இந்த அடிப்படை வசதி களை மேம்படுத்த பட்ஜெட்டில் எந்த நிதி யும் ஒதுக்கப்படவில்லை. சக்ஷம் அங்கன்  வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்திற்கு  2025-26இல் ரூ.21,960 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இது 2023-24 ஆம் ஆண் டின் செலவினமான ரூ.21,809.64 கோடியை  விட வெறும் ரூ.150.36 கோடி அதிகரிப்பு  மட்டுமே. சுமார் 10 கோடி பயனாளி களுக்கு (8 கோடி குழந்தைகள் மற்றும் 2  கோடி கர்ப்பிணிகள்/பாலூட்டும் தாய்  மார்கள்) இந்த உயர்வு ஒரு குழந்தைக்கு  5 பைசா மட்டுமே ஆகும்.

2018 முதல் மாதம் ரூ.4,500 மற்றும்  ரூ.2,250 ஊதியத்தில் பணிபுரியும் 26 லட்சம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு  எந்த ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட வில்லை. உச்சநீதிமன்றம் பணிக்கொடை வழங்க உத்தரவிட்டும், குஜராத் உயர்நீதி மன்றம் கிரேடு III மற்றும் IV அரசு ஊழி யர்களாக அங்கீகரிக்க உத்தரவிட்டும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது கண்டத்துக்குரியது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டிற்கு எதிராக பிப்ரவரி 5 ஆம்  தேதி நடைபெறும் தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்ட மைப்பு கலந்து கொள்ளும். மேலும் பிப்ர வரி 13ஆம் தேதி தல்கதோரா மைதா னத்தில் (புதுதில்லி) நடைபெறும் தேசிய மாநாட்டில் எதிர்கால போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.