சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிப்படி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவும் கோரி செவ்வாயன்று (அக்.14) மாநிலம் முழுவதும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மேலும், முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டையும் அனுப்பும் இயக்கத்தையும் நடத்தினர்.
