tamilnadu

img

ஈபிஎஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 13- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 பஞ்சப்படியுடன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, ஈபிஎஃப் பென்ஷனர்கள் நலச் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு ஈபிஎஃப் ஓய்வூதி யத்தை உயர்த்தாததால், மூத்த குடி மக்களின் சிரமத்தைப் போக்கும் வித மாக கேரளம், ஆந்திரா, கர்நாடகா, ஹரி யானா, டெல்லி, மற்றும் புதுச்சேரி அரசு கள் குறைந்தபட்சமாக ரூ.1,600 சமூக ஓய்வூதியமாக வழங்கி வருகின்றன. இதேபோல், தமிழ்நாடு அரசும் 2021- ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஈபிஎஃப் 95 ஓய்வூதியர்களுக்கு ரூ.5,000 சமூக ஓய்வூதியம் வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மாவட்ட ஈபிஎஃப் பென்ஷனர்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என்.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் கே.குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய கவுன்சில் உறுப்பி னர் ஏ.ஆர். துரைசாமி, மாவட்ட துணைத்  தலைவர்கள் என். செல்லத்துரை, கே.  ராஜேந்திரன், இன்ஜினியர் சங்க பொதுச் செயலாளர் சி. துரைசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முடிவில், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர். மணி நன்றி கூறி னார். இப்போராட்டத்தில், ஏராளமா னோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.