tamilnadu

img

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! மாதர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! மாதர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை,  ஆக. 23-  தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுக்கோட்டை மாநாடு வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 14 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சின்னப்பா பூங்காவில் நிறை வடைந்தது. அங்கு மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி தலை மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில செய லாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஜி.ராணி, விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா உள்ளிட்டோர் உரையாற்றினர். சனிக்கிழமை நடை பெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச் செயலாளர் ஜி.ராணி உரை யாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் ஜே.வைகைராணி ஆகி யோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.  பொன்னுதாய் நிறைவுரை யாற்றினார். மாவட்டத் தலைவராக எஸ்.பாண்டிச் செல்வி, செயலாளராக பி.சுசிலா, பொருளாளராக ஆர்.மதியரசி, துணைத் தலைவர்களாக வி.இளவரசி, சுதா, துணைச்  செயலாளர்களாக கே.சாந்தி, ஆர்.முத்துமாரி உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக மாநகரச் செய லாளர் ஆர்.முத்துமாரி வர வேற்க, தலைவர் விஜி நன்றி கூறினார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடு மைகளைத் தடுத்து நிறுத்த வும், அவர்களின் பாது காப்பை உறுதிப்படுத்தவும் அரசு உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  அதிகரித்து வரும் வர தட்சணை கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான சட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.