நீடித்த பொருளாதாரத்திற்கான ஆற்றல் மாற்ற கருத்தரங்கம்
சிதம்பரம், அக் 19- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் உலோகங்கள் இணைப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் நிலையான பொருளாதாரத்திற்கான ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பதற்கான எதிர்கால மேம்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச் சகத்தின் நிதி உதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங் கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அண்ணா மலை பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் கலந்து கொண்டு கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசி துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த கருத்த ரங்கில் உலகப் புகழ்பெற்ற டாக்டர் எஸ்.சுதாகர், வேலூர் விஐடி கல்லூரி முனைவர் ராஜாசெல்லப்பன். பேராசிரியர்கள் பிரேம் ஆனந்த், கோபாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பொறியியல் துறையில் மற்றும் ஆற்றல் சேமிப்பு மற்றும் பசுமை பொருளாதார வளர்ச்சி குறித்த சமீபத்திய ஆராய்ச்சிகள், விஞ்ஞானங்களை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரேம் ஆனந்த், பேராசிரியை மலர்விழி, இணை பேராசிரியர் சிவராஜ் மற்றும் முனைவர் ராஜலட்சுமி ஆகியோர் கருத்த ரங்கை சிறப்பாக நடத்தினர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்லூரிகள் மற்றும் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து பேராசிரி யர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் என 85-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
