tamilnadu

img

தொடர் விடுமுறை நிறைவு பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தொடர் விடுமுறை நிறைவு பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

மதுரை, அக்.5- தொடர் விடுமுறை நிறைவடைந்ததை யொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள்  ஆர்வம் காட்டினர். இதனால், பேருந்து, ரயில்  நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுபோல், பள்ளி களுக்கும், காலாண்டு விடுமுறை விடப் பட்டிருந்தது. இந்த தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுரையில் உள்ள வர்கள் வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். குறிப் பாக மதுரையில் உள்ளவர்கள், சென்னை, பெங்களுரூ, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு விடுமுறைக்காக சென்ற னர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏரா ளமானவர்கள் மதுரைக்கு வந்தனர். இந்தநிலையில் தொடர் விடுமுறை ஞாயி றன்று முடிவடைந்தது. திங்கட்கிழமை வழக்  கம் போல், பள்ளிகள், கல்லூரிகள், அரசு  அலுவலங்கள் செயல்படுகின்றன. இத னால், தங்களின் இருப்பிடங்களுக்கு செல்வ தற்கு ஞாயிறன்று காலை முதலே மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குழந்தைகளை அழைத்து கொண்டும், கைகளில் பெரிய  பெரிய பைகளுடன், பேருந்து நிலையங்களி லும், ரயில்நிலையங்களிலும் மக்கள் கூட்டம்  அலைமோதியது. ரயில் நிலையம் சொந்த ஊர் செல்வதற்காக, மதுரை ரயில்  நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவர்கள் சென்னை, பெங்களூர், கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வ தற்காக காத்திருந்தனர். பேருந்துகளில் கூட்டம் அவர்கள், மதுரையில் இருந்து சென்னை  போன்ற வட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணித்தனர். இதனால் முன்ப திவில்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சொந்த ஊர்  களுக்கு செல்லும் ஆர்வத்தில், தங்க ளுக்கான இடத்தை பிடிப்பதற்காக ஒவ் வொரு ரயிலிலும் மக்கள் முண்டி அடித்து கொண்டு ஏறியதை காணமுடிந்தது. ரயில் நிலையம் மட்டுமின்றி பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிக மாக இருந்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆம்னி பஸ் நிலையம், ஆரப்  பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களி லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக மதுரையில் இருந்து  சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக் கும், நெல்லை, குமரி உள்ளிட்ட தென்  மாவட்டங்களுக்கும் வழக்கத்தை விட  கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இதில் பயணிகள் அனை வரும் குடும்பம், குடும்பமாக பயணித்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சொந்த  ஊர்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்று  வருகின்றனர். ஆனால், அவர்களின் வச திக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்து களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கி றது. இதனால், பல மணி நேரம் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுடன் காத்தி ருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.  இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்  டிகை வர இருப்பதால், வரும் நாட்களிலா வது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க  வேண்டும்” என்றனர்.