tamilnadu

img

இராமேஸ்வரம் - இராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சேவை துவங்கியது

இராமேஸ்வரம் - இராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சேவை துவங்கியது

இராமேஸ்வரம், செப். 16- இராமேஸ்வரம் - இராமநாதபுரம் இடையான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் கடந்த செப்.13 ஆம் தேதி மின்சார சோதனை ரயிலை இயக்கி  அதிகாரிகள் ஆய்வு பணிகளைசெய்தனர்.  இதையடுத்து இராமேஸ்வரம் வரை மின்சார ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாயன்று முதல் குறிப்பிட்ட சில  மின்சார இன்ஜின் ரயில்கள் இராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதனடிப்படையில் திருச்சி - இரா மேஸ்வரம், கோவை - இராமேஸ்வரம், ஓகா - இராமேஸ்வரம் மற்றும் இரா மேஸ்வரம் - திருப்பதி ஆகிய நான்கு விரைவு ரயில்கள் செவ்வாயன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.  மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு உள்ளதால், ரயிலின் வேகம் 120 கி.மீ வரை அதி கரிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.