எலத்தூர் ஏரி 3-வது உயிரியல் பாரம்பரிய தலமாக அறிவிப்பு
சென்னை, செப். 2 - ஈரோடு மாவட்டம், எலத் தூர் ஏரியை மாநிலத்தின் மூன்றாவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வனம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த அறிவிப்பை வெளி யிட்டார். உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், 2022-இல் மதுரை மாவட்டம் அரிட்டா பட்டியும், கடந்த மார்ச் மாதத்தில் திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியும் பல்லு யிர் பாரம்பரியத் தலமாக அறி விக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எலத்தூர் ஏரி மூன்றாவது இடமாக அறி விக்கப்பட்டுள்ளது. 37 ஹெக்டருக்கு அதிக மான பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல்வகை பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஈர நிலை அமைப்புகளுக்கு முக்கிய வாழ்விடமாக உள் ளது. புலம்பெயரும் காலங் களில் 5,000க்கும் மேற்பட்ட பல்வகை பறவைகள் காணப் படும். இதுவரை 187 வகை யான பறவைகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. அழிந்து வரும் உயிரி னங்களான, பெரிய புள்ளி கழுகு, கம்பளிக் கழுத்து நாரை, ஓவிய நாரை, கிழக்கு நீர்த்தாரை ஆகிய பறவைகளையும் பாது காக்கும் இடமாக உள்ளது. மேலும் 38 தாவர வகைகள், 35 பட்டாம்பூச்சி வகைகள், 12 வகை ஊர்வனங்கள், 7 வகை பாலூட்டிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இந்த ஏரி வாழ்விடமாக விளங்கி வருகிறது.