tamilnadu

img

கல்விதான் பெண்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் :முதலமைச்சர்

சென்னை,ஜூலை 5- கல்வி ஒன்றே பெண்களுக்கு  தைரியத்தையும் தன்னம்பிக்கையை யும் அளிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாயன்று(ஜூலை 5) நடந்த  பட்டமளிப்பு விழாவில்  மாணவர்க ளுக்கு பட்டங்களை அவர் வழங்கினார்.  இதில் கலை பிரிவில் 1613 மாணவர்க ளும், அறிவியல் பிரிவில் 1597 பேர் என  மொத்தம் 3210 பேர் பட்டம் பெற்றனர். பின்னர் விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முதல மைச்சராக மட்டும் நான் உங்களை  வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரி யின் முன்னாள் மாணவர் என்ற  முறையிலும் உங்களை வாழ்த்துவ தற்காக நான் வந்திருக்கிறேன்” என்றார்.  கல்விதான் யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவுச் சொத்துக்களை உருவாக்கித் தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநிலக் கல்லூரி. சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலக் கல்லூரி பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அதி கம் படிக்கக்கூடிய கல்லூரி, விளிம்பு நிலை மக்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி, புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வர்கள் அதிகம் படிக்கக்கூடிய கல்லூரி என்கிற வகையில் சமூகநீதிக்  கல்லூரியாகவும் இது அமைந்திருப் பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் கல்வி கற்பது என்பது,  வேலைக்குப் போவதோடு முடிந்து விடுவது இல்லை. தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்கு வதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற  வேண்டும். கலை, இலக்கியம், நாடகம்,  நாட்டியம், விளையாட்டு போன்ற வற்றில் இருக்கக்கூடிய விருப்பங்க ளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்ற னர். அப்படி இல்லாமல் தங்களது  விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக் கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே  உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக் காக, 2000 பேர் அமரக்கூடிய வகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும். 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையை சீர்செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் தாராளமாக நிதி கொடுக்க வேண்டும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.  இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

;