tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறையை தனியாருக்கு கொடுக்காதீர்! நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு தீர்மானம்

நெடுஞ்சாலைத்துறையை தனியாருக்கு கொடுக்காதீர்! நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு தீர்மானம்

கோயம்புத்தூர், செப்.20- நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு அரசாங்கமே நடத்த வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு சனியன்று தோழர். பெ.பச்சமுத்து நினைவரங்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் க. முத்துக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் ஆர். வைகுண்டம் வவேற்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் டி.மோகன்ராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம். சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் ஏ. ரெங்கசாமி வேலை அறிக்கையினையும், மாநில பொரு ளாளர் எம். தங்கமுத்து வரவு செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். மாநாட்டில், முன்னாள் மாநிலத் தலைவர் ஆர். தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி உரையாற்றினர். தீர்மானங்கள் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தேர்தல்கால வாக்குறுதியின்படி தமிழக முதல்வர். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தில், அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு சிறப்பு நிகழ்வாக அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உரிய காலத்தில், முதுநிலைப்படி பவானிசாகர் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். அலுவலக உதவியாளர்/அலுவலக காவலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவி உயர்வினை உடன் வழங்க வேண்டும். இளநிலை வரைதொழில் அலுவலர்கள் மற்றும் வரைவாளர்கள் முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் ஆகிய பதவிகளில், பதவி உயர்வினை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவராக  மா.தங்கமுத்து, மாநில பொதுச் செய லாளராக ஆ. ரங்கசாமி, மாநில செய லாளர்களாக ஆர்.காத்தவராயன், மா.கிருஷ்ணன், பெ.அறிவழகன், கோ.சுப்பிரமணி, எஸ்.ரவிச்சந்திரன், ஆர்.ஆரோக்கியசாமி, துணைத் தலைவர்களாக தி.மோகன்ராஜ், கொ.பெரியசாமி, சி. வல்லத்தரசு, கி.தங்க ராஜ், ஆர்.மாலதிராணி, டி.கண்ணன், மாநிலப் பொருளாளராக  க.முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சி. பரமேஸ்வரி நிறைவுரையாற்றினார். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.மாலதிராணி நன்றி கூறினார். முன்னதாக, பணி ஓய்வு பெற்ற மாநில நிர்வாகிகளை பாராட்டி கௌரவித்தனர். மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற னர்.