திமுக-சிபிஎம் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தகவல்
சென்னை, மார்ச் 10 - திமுக குறிப்பிட்ட தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை; கூடுதல் எண்ணிக் கையை பெற புதனன்றும் (மார்ச் 11) பேச்சு வார்த்தை நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செய லாளர்கள் திருச்சி சிவா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரை திமுக பேச்சுவார்த்தைக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவுடன் செவ்வாயன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “திமுக தொகுதி பங்கீட்டுக் குழு குறிப்பிட்ட தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு ஏற்பில்லை. கூடுதலான தொகுதிகளை வழங்க வற்புறுத்தி உள்ளோம். தங்கள் தலைமை யுடன் பேசிய பிறகு மீண்டும் பேசலாம் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. எனவே, நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும்” என்றார். இரட்டை இலக்கம் என்பதிலிருந்து கூடுதல் எண்ணிக்கை என குறைந்திருப் பது ஏன்? என்ற செய்தியாளர் ஒருவரது கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய கட்சிகள் அணிக்கு வந்துள்ளது என்ற நியாயமான காரணத்தை திமுக தரப்பில் தெரிவித்தார்கள். அது ஏற்கத்தக்க ஒன்றாக உள்ளது. நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான இடங்களில் போட்டி யிட வேண்டும் என்ற முறையில் வற்புறுத்தி யுள்ளோம்” என்றார். ஐயுஎம்எல் கட்சிக்கு தொகுதியை குறைத்தும், காங்கிரசுக்கு அதிகரித்தும் உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியிடம் எவ்வாறு வலியுறுத்தினார்கள் என்ற கேள்விக்கும் பதிலளித்த சண்முகம், “அந்த மாதிரியான முறையில் எங்களிடம் வலியுறுத்தவில்லை. கூடுதல் தொகுதி வேண்டும் என்கிறோம். அவர்கள் தரப்பில் உள்ள சிரமங்களை தெரிவித்தார்கள். பரஸ்பரம் பேசி முடிவெடுப்போம். எண்ணி க்கையை தீர்மானித்த பிறகுதான் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதிப்படுத்துவோம். கடந்த முறையை விட தாண்டி வர வேண்டு மென்கிற முறையில்தான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றும் பெ. சண்முகம் கூறினார்.
