தீபாவளி சிறப்பு ரயில்கள்: முன்பதிவு இன்று தொடங்குகிறது
சென்னை: தீபாவளியையொட்டி பயணி களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, தெற்கு ரயில்வே தமிழ்நாட்டில் பல சிறப்பு ரயில் களை இயக்க உள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் மற்றும் அவற்றின் சேவை விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில் எண்.06156 (நெல்லை - செங்கல்பட்டு) இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் அக்.21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதி காலை 4 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறு மார்க்கத்தில், ரயில் எண்.06155 (செங்கல்பட்டு - நெல்லை) இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் அக்.21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடையும். ரயில் எண்.06044 (போத்தனூர் - டாக்டர் எம்.ஜி. ஆர் சென்னை சென்ட்ரல்) அதிவிரைவு சிறப்பு ரயில் அக்.19 அன்று போத்தனூரிலிருந்து இரவு 11.20 மணிக் குப் புறப்பட்டு, மறுநாள் காலை 08.45 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலை வந்தடை யும். ரயில் எண்.06001 (டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல்) அதிவிரைவு சிறப்பு ரயில் அக்.20 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்ட்ரலைச் சென்றடையும். ரயில் எண்.06108 (திருவனந்தபுரம் நார்த் - சென்னை எழும்பூர்) அதிவிரைவு சிறப்பு ரயில் அக்.21 அன்று திரு வனந்தபுரம் வடக்கிலிருந்து (நார்த்) மாலை 05.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்.12 அன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.