தீபாவளி சிறப்பு பேருந்துகள்: 2 லட்சம் பேர் பயணம் என தகவல்
திருப்பூர், அக்.22- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட் டத்தில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டிருப் பதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20 ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தங்கியுள்ள வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலும், சொந்த ஊர் சென்ற வர்கள் திருப்பூர் திரும்பி வர புதனன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருப்பூரின் மத்திய பேருந்து நிலையம், தியாகி திருப்பூர் குமரன் கோவில்வழி பேருந்து நிலையம், தீரன் சின்னமலை புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. மக் களின் கூட்ட நெரிசலை பொறுத்து 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட தோடு, தாலுகா பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும், நகர பேருந் துகள் என 1000 பேருந்துகள் வரை இயக்கப் பட்டதாக திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்கப்பட்ட இந்த சிறப்பு பேருந்து கள் மூலம் கடந்த 5 தினங்களில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
