திருபுவனம் திகோ சில்க்ஸ் நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
கும்பகோணம், அக்.15- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபு வனம் திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் 70 ஆவது பொது பேரவை நடைபெற்றது. அப்போது சங்க செயலாட்சியர் ஜி.சங்கரேஸ்வரி தெரி விக்கையில், “தீபாவளியையொட்டி இந்த வருடம் சங்க உறுப்பினர்கள் பெற்ற நெசவுக் கூலியில் ரூ.1-க்கு 40 பைசா வீதம், 1180 உறுப்பினர்களுக்கு ரூ.312.83 லட்சம் போனசாக வும், 1808 உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் 14 சதவீதம் ரூ.98.53 லட்சமும் என கூடுதல் ரூ.411.36 லட்சம் தொகைக் கான காசோலையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். மேலும் சங்க வளர்ச்சியினை கருத்தில் கொண்டும், சங்க அங்கத்தினர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்றார்.
