செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணி
செங்கல்பட்டு,செப். 11- செங்கல்பட்டு ரயில் நிலையம், தினசரி 60 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் முக்கிய மான ரயில் நிலையமாகும். இந்த நிலையம் தற்போது அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதிய நிர்வாகக் கட்டிடம், கான்கோர்ஸ் தாழ்வாரம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களுக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்திலுள்ளன. நிலைய முகப்பு மற்றும் பாதசாரிகள் நடைபாதையின் மேற்பட்ட பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டது. நடைமேடைகளில் மேற்கூரைகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நடைமேடை எண் 2 மற்றும் 7,8 அருகே இரண்டு லிப்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. நடைமேடை எண் 3,4 மற்றும் 5,6ல் கூடுதல் லிப்ட்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. பாதசாரிகள் நடைபாதை, பயணிகள் தகவல் அறியும் பதாதைகள் மற்றும் மின்சாரப் பணிகள் ஆகிய வற்றின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வரு கின்றன. நவீன வடிவமைப்புடன் புதிய மாடி, தரை நிலை கட்டிடம், விசாலமான கான்கோர்ஸ் பகுதி, ஏசி காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள் மற்றும் விஐபி ஓய்வறை கள், விரிவாக்கப்பட்ட பார்க்கிங் வசதி மற்றும் பாத சாரிகளுக்கான நடப்புப் பாதைகள், நவீன பொது தகவல் மற்றும் காட்சி அமைப்பு, சிசிடிவி கண்காணிப்புடன் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவை அமைக்கப்படவுள்ளன.