tamilnadu

img

தேவாலா பிஆர்சிசி தார் கலவை ஆலைக்கு சீல்

தேவாலா பிஆர்சிசி தார் கலவை ஆலைக்கு சீல்

சிபிஎம் தலைமையிலான போராட்டத்திற்கு வெற்றி

உதகை, ஆக. 4  சட்டத்திற்கு புறம்பாக இயங்  கும், பிஆர்சிசி தார் கலவை ஆலை யால்மக்களின் உயிருக்கும், உடை மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டி ருந்த நிலையில், சிபிஎம் தலைமை யில் அனைத்துக் கட்சியினரின் போராட்டத்தையடுத்து, அந்த  ஆலை திங்களன்று நகராட்சி நிர் வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், நெல்லியா லம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வில், பிஆர்சிசி என்கிற தார் கலவை  ஆலை இயங்கி வருகிறது. குடி யிருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில், இந்த ஆலை வெளி யேற்றும் நச்சுப்புகையால், பொது மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ் வாமை போன்ற பல்வேறு நோய்க ளால் மக்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேலும், இந்த ஆலை யின் செயல்பாடுகளால் இதுவரை ஒன்பதுக்கும் மேற்பட்டோர் உயிரி ழந்திருப்பதாக கூறுப்படுகிறது.  இதுகுறித்து அப்பகுதி  மக்கள் அதி காரிகளுக்கு பலமுறை புகார் தெரி வித்துள்ளனர். இருந்தபோதிலும், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.  இந்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ஆலையில் குவிக் கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களின், பாரம் தாங்காமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அருகிலிருந்த 9 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.  இதனையடுத்து, இந்த ஆலையை உடனடியாக இடமாற் றம் செய்யவேண்டும். பாதிப்புக் குள்ளான குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத் தில் ஈடுபட்டது. மேலும், அனைத்து  கட்சியினரையும் இணைத்து வலு மிக்க போராட்டத்தை முன்னெடுத் தது. இப்போராட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிக ளும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து இணைந்து கொண்டது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக, அதிமுக கட்சிகளின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் சிபிஎம் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நீலகிரி ஆட்சியரை நேரில் சந் தித்து, இந்த ஆலையை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தி ருந்தனர். இந்நிலையில், திங்களன்று நெல்லியாளம் நகராட்சி ஆணை யாளர் சக்திவேல் தலைமையில், வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில்  இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட் டது. நிரந்தரமாக இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள், அங்கிருந்த அனைத்து  கட்சியினர் மற்றும் பொதுமக்களி டம் தெரிவித்தனர்.