ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்'
சென்னை, செப்.7 - சோழன், மலைக்கோட்டை, பாண்டியன் உள்பட ஐந்து விரைவு ரயில்கள் செப்டம்பர் 10 முதல் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் (22675), எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654/ 12653), எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), எழும்பூர் - இரா மேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் (22661/ 22662), எழும்பூர் - இரா மேஸ்வரம் போட் மெயில் எக்ஸ்பிரஸ் (16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயிலை கடற்கரை யில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், செப். 10 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.