tamilnadu

img

தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை 

தஞ்சாவூர், செப். 22-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சாவூர் மாநகர 5 ஆவது மாநாடு பாலாஜி நகர், மருத்துவக் கல்லூரி சாலையில், சனிக்கிழமை மாநகரத் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.  இதில், பிரேமா சங்கக் கொடி ஏற்றினார். பி.கலைச்செல்வி வரவேற்றார். நந்தினி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநகரச் செயலாளர் சி.ராஜன் வேலை அறிக்கை வாசித்தார். பொறியாளர் மற்றும் ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் எஸ்.மணிமாறன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.  இதில், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் பேசினார்.  மாநாட்டில் 15 பேர் கொண்ட புதிய மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநகரத் தலைவராக கே.மோகன், மாநகரச் செயலாளராக சி.ராஜன், மாநகரப் பொருளாளராக எஸ்.மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அண்டை மாநிலங்களைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை ஏஏஒய் அட்டைகளாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.