அரியலூரில் கியூபா ஆதரவு நிதி வழங்கல்
அரியலூர், ஆக.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டத்தில் 6 இடைக் கமிட்டி களில் இருந்து கியூபாவுக்கு ஆதரவு உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரியலூர், செந்துறை, திருமா னூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் இருந்து கியூபாவுக்கு ஆதரவு திரட்டிய நிதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனிடம் வழங்கினர். கட்சியின் இடைக் கமிட்டி செயலாளர் கள், இடைக்குழு உறுப்பினர்கள் அனைத்து இடைக்கமிட்டிகளிடம் நேரடியாகச் சென்று, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரை சாமி, வி.பரமசிவம் உள்ளிட்டோர் சேர்ந்து இந்தப் பணியை செய்திருந்தனர்.