திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி, அக். 16- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரங்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு ஈரப்பதத்தை காரணம் காட்டி, கொள்முதல் செய்வதில்லை. தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டியும், அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் அளவுகளை கள ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என நிர்வாகத்தை கண்டித்தும் சிபிஎம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், கே.பி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் பழனியப்பன், காவல் உதவி ஆய்வாளர் யுவராஜ், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் அடிப்படையில் தற்காலிகமாக சாலை மறியல் ஒத்திவைக்கப்பட்டது.
