பட்டமுடையான் கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி, ஆக. 24- ஆவுடையார் கோவில் ஒன்றியம் பெரும் மருதூர், பூவளூர், நாட்டாணி சிறுகாசாவயல் ஆகிய கிளைகளின் சார்பாக பெருமருதூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எஸ்.டி. பிரபாகரன் தலைமை வகித்தார். பெருமருதூர் பட்டமுடையான் கிராமத்தில் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நொச்சியேந்தல் கிராமம் பள்ளிக்கூடத்திற்கு தென்புறம் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். பூவளூர் கீழகுடியிருப்பு கிராமத்திற்கு குடிநீர் வசதி மற்றும் மயான சாலை வசதி செய்து தர வேண்டும். மின்னாமொழி சென்று வரும் நகரப் பேருந்தை பெருமருதூர் கீழ குடியிருப்பு வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியன், தென்றல் கருப்பையா, தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர், நெருப்பு முருகேஸ், ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.