tamilnadu

img

விடுதி மாணவர்களை துணி மூட்டை தூக்க வைத்ததை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விடுதி மாணவர்களை துணி மூட்டை தூக்க வைத்ததை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், அக்.18- காட்டுமன்னார்குடியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி மாணவர்களை துணி மூட்டை தூக்க வைத்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காட்டுமன்னார்குடி நகரத்தில் பருவத ராஜகுல அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். இந்த மாணவர்களை விடுதியின் நிர்வாகி அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விபிஎஸ் என்ற பெயரில் உள்ள துணிக்கடையில் தீபாவளி நேரத்தில் அழைத்து துணி மூட்டைகளை தூக்க வைத்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகி மீது மார்க்சிஸ்ட்கட்சியினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நகர அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேன்மொழி, பிரகாஷ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், வட்டக்குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம், தனபால், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிளை செயலாளர் ஆனந்த், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகி கிரிஸ்டோ பர், விவசாய சங்க வட்ட நிர்வாகி ராஜேந்திரன், கிளைச் செயலாளர் ஆனந்த வீரன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சுபாஷ், ராஜசேகர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.