tamilnadu

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததைக்  கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 9- பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம்  மக்களை தேர்தல் ஆணையத்தை முறைகேடாக பயன்படுத்தி பெயர் நீக்கம் செய்து அராஜகம் செய்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று, எடத்தெரு அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பாலக்கரை பகுதிச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான  சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில கட்டுப்பாட்டு குழுத்தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.லெனின், எஸ்.ரேணுகா, என்.கார்த்திகேயன், வி.மணிமாறன் ஆகியோர் பேசினர்.  புதுக்கோட்டை  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், கே.முகமதலிஜின்னா, அ.மணவாளன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க நிர்வாகி எம்.அசோகன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், டி.சலோமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஜி.வெண்ணிலா, டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லதுரை, எ. கலையரசி, எ.ரெங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.