சிபிஎம் தலைவர்கள் நேரில் நலம் விசாரிப்பு!
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். அங்கிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் தோழர் நல்லகண்ணுவின் மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோரிடம் உடல் நலம், சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். தோழர் ஆர். நல்லகண்ணு விரைவில் மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.