tamilnadu

img

பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி சிபிஎம் நூதனப் போராட்டம்

பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி சிபிஎம் நூதனப் போராட்டம்'

திருச்சிராப்பள்ளி, ஆக. 6 - ஆண்டுக்கணக்கில் நடைபெறும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து  முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடை பெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 40 ஆவது வார்டில் குண்டும் குழியுமான கூத்தப்பர் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும். பகவதிபுரம், ஆனந் தாநகர் பூங்காவை சீரமைத்து பொது மக்கள், குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தண்ணீர் இல்லா மல் ஆண்டுக்கணக்கில் பூட்டி கிடக்கும் கழிப்பறைகளை திறக்க வேண்டும். குட்செட் ரோடு, வ.உ.சி நகரில் பாதாளச்  சாக்கடை பணி முடிந்து பல மாதங்களாக  போடப்படாமல் உள்ள சாலையை உடனே  போட வேண்டும். திருவெறும்பூர் பெரிய குளத்தில் குப்பைகள் கொட்டுவதையும், சாக்கடை நீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.  ஐ.ஏ.எஸ் நகரில் ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை  திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.  தேசிய நெடுஞ்சாலைத் துறை திரு வெறும்பூர் மேம்பாலத்தின் இருபுறமும் பெட்ரோல் பங்க் வரை, அம்பேத்கர் நகர் சர்வீஸ் சாலை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பகவதிபுரம், பழைய  பேருந்து நிலையம் கிளைகள் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகவதிபுரம் கூத்தைப்பார் சாலை யில் சங்கு ஊதி, தப்பு அடித்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள்  பாலு, பெருமாள் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராஜா, காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், மூத்த தோழர் கே.சி. பாண்டியன் ஆகியோர் பேசினர்.  இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.