tamilnadu

img

சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் அ.சேகர் 11 ஆம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிப்பு

சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர்
தோழர் அ.சேகர் 11 ஆம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிப்பு

விருதுநகர், செப்.30- விருதுநகர் மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செய லாளர் தோழர் அ.சேகரின் 11ஆம் ஆண்டு நினைவுதினம்  கடைப் பிடிக்கப்பட்டது. விருதுநகரில் நகராட்சி அலுவல கம் முன்பு நகர் குழு உறுப்பினர் ஆர்.விஜயபாண்டி, பாண்டியன் நகரில் புஷ்பராஜ், அல்லம்பட்டியில் ஜி.சாவித்திரி, பாத்திமா நகரில் பி.ஸ்டாலின், தியாகி சந்துரு நினை வகத்தில் நகர் குழு உறுப்பினர் செல்வம், விஎம்சி காலனியில் கிளைச் செயலாளர் ராஜேஸ்வரி, எம்.ஆர்.வி நினைவகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி ஆகியோர் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் ஆ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், எம்.சுந்தரபாண்டியன், வி.முருகன், எல்.முருகன், மூத்த தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், நகர் குழு உறுப்பினர் பாலமுருகன், சமூக ஆர்வலர் எம். ஊர்க்காவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் நகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, மாவட்டக்குழு உறுப்பி னர் பி.பாலசுப்பிரமணியன், மாநகர் குழு உறுப்பினர் முத்துராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் நகரச் செயலாளர் பரமதயாளன் தலைமை யில் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியன், சிஐடியு நிர்வாகிகள் பி.அன்புச்செல்வன், திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.ஆர்.நகரில் தெற்கு ஒன்றியச்  செயலாளர் பி.நேரு தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் மாவட்டக்குழு உறுப்பி னர் கே.விஜயகுமார் தலைமையில், நகர் செயலாளர் எஸ்.சரோஜா, ஒன்றி யச் செயலாளர் எஸ்.மனோஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூலக்கரையில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முத்துவேலு தலை மையில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் எம்.அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.வள்ளியம்மாள், ஏ.முத்துமாரி உள்ளிட்டோர் பங் கேற்றனர். பாலையம்பட்டியில் சுப்பிரமணி தலைமையில் ஒன்றிய செயலாளர் எம்.கணேசன், ஒன்றியகுழு உறுப்பி னர்கள் லீலாவதி, சிவராமன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். திருவல்லிபுத்தூர்  சீனிவாச ராவ் நினைவு தினம், முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.சேகர் நினைவு தினம் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று கடைப்பிடிக்கப் பட்டது. இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய  அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தலைமை  தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சோமசுந்தரம், ஜீவானந்தம், பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் நகர் குழு சார்பில் நகரச் செயலாளர் எம்.சுப்பிர மணியன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மகாலட்சுமி, மூத்த தோழர் கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் கண்ணன், முருகானந்தம், சரவணன்,  சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூரில் நகரச் செய லாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி னார். ஒன்றியச் செயலாளர் சசி குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.