tamilnadu

வேப்பூரில் இடி விழுந்து பலியானோர் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வலியுறுத்தல்

வேப்பூரில் இடி விழுந்து பலியானோர் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வலியுறுத்தல்

கடலூர், அக்.16- கடலூர் மாவட்டம் வேப்பூரில் இடி விழுந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர்  மாவட்டச் செயலாளர்  கோ. மாதவன் கேட்டுக்கொணடுள்ளார். இதுகுறித்து அவர்  தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்     கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ரெட்டாக் குறிச்சி கிராமத்தை சார்ந்த சுப்பிரமணி  என்பவரின் கூரை வீடு அக்டோபர் 11 அன்று இரவு இடி மின்னல் தாக்கி முழுமையாக எரிந்து சேதமடைந்தது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து குடும்பத்தினர் பெரும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர் எரிந்த வீட்டை மீண்டும் கட்டவும் சேதமடைந்த பொருட்களுக்கு தமிழக அரசு  இரண்டு லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் வேப்பூர் வட்டம் கழுதூர் கிராமத்தில் வியாழக்கிழமை (அக்,16)  மக்காச்சோள வயலுக்கு  கூலி வேலைக்கு சென்ற கவிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு மற்றும்  அரிநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆகிய நான்கு பேர் வயலில் மின்னல் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் மேலும் ஒருவர் இரண்டு கண்களை பறி கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம்  அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது  உயிர்இழுந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு  முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில்  மாதவன் மேலும் கூறியுள்ளார்.  இந்த கடிதத்தின் நகல்  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது.