tamilnadu

img

பாஜக ஆளும் உ.பி.,யில் தலித் இளைஞரை படுகொலை செய்த கும்பல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிபிஎம் கோரிக்கை

பாஜக ஆளும் உ.பி.,யில் தலித் இளைஞரை படுகொலை செய்த கும்பல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிபிஎம் கோரிக்கை

ரேபரேலி உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக கோரக்பூர் மடத்தின் சாமியார் ஆதித்ய நாத் உள்ளார். இவரது ஆட்சியின் கீழ் பெண்கள், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடி மக்கள் கடும் இன் னலை சந்தித்து வருகின்றனர். கிட்டத் தட்ட உத்தரப்பிரதேசம் குண்டர்க ளின் கூடாரமாக மாறிவிட்டது.  இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அக்.1 ஆம் தேதி திருட்டுச் சந்தேகத் தின் பேரில் ஒரு தலித் இளைஞரை, கும்பல் ஒன்று கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதேபூர் கோத்வாலி பகுதியைச் சேர்ந்த ஹரி ஓம் (38) என்ற இளை ஞர் ரேபரேலி உஞ்சாஹர் அருகே திருடன் என சந்தேகிக்கப்பட்டு 12க்கும் மேற்பட்ட கும்பல் அவரை கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியது.  ஹரி ஓம் “நான் நிரபராதி” என்று மீண்டும், மீண்டும் கெஞ்சியும் அக் கும்பல் தாக்குதலை நிறுத்த வில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாள் (அக்.2) பதேபூர் அருகே உள்ள தண்டவாளத்தில் ஹரி ஓம் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரக் கொலை தொடர்பாக ஹரி ஓமின் மனைவி அளித்த புகாரின் பேரில், 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள் ளனர். சம்பவம் தொடர்பான வீடி யோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், உஞ்சாஹர் ஆய் வாளர் உட்பட 3 காவலர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஎம் கண்டனம் இத்தகைய சூழலில், ஹரி ஓம் கும்பல் படுகொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த மிருகத்தனமான சாதி வன் முறையால் மேலும் ஒரு தலித் உயிர் பலியாகியுள்ளது. பாஜகவின் சட்ட மற்ற ஆட்சி வெறுப்பையும்,தண்டனை யின்மையையும் வளர்க்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடி யாகக் கைது செய்து மிகக் கடுமை யான தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுக் கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.