tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, ஆக. 2 - மின் நுகர்வோர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் என்ற ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை புதுச்சேரி அரசு உடனே கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சி யின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச் சந்திரன் சனிக்கிழமை (ஆக. 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் மய மாக்கக் கூடாது என சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மின்துறை தனியார் மயமாவதை எதிர்த்து சென்ற ஆண்டு மக்களிடம் சென்று ஒரு லட்சம் கையெழுத்து பெற்று டிசம்பர் மாதம் மாநில அரசிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மக்க ளின் எண்ணங்களை புறந்தள்ளிவிட்டு மீண்டும் மின் துறையை தனியார் மயமாக்கும் வகையில் 4.5 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை, மும்பைச் சேர்ந்த தனியார் நிறு வனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. இன்னும் சில வாரங்களில் மின் மீட்டர் பொருத்தும் பணியை துவக்க உள்ள தாக தெரிகிறது. இந்த மின் மீட்டரால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள் என்பதால் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். 3விதமான கட்டணம் இந்த ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தால் மின் கட்டணம் மூன்று பிரிவுகளாக கட்டணம் வசூலிக்கப்படும். 9 ஆயிரம் மதிப்புள்ள மின் மீட்டரை ஒவ்வொரு மாத கட்டணத்தோடு வசூலிக்க புதுச்சேரி அரசு திட்டம் தீட்டியுள்ளது. இந்த நாசகர திட்டத்தால் மின் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக மின் துறை பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அபாயம் ஏற்படும். புரோக்கர் வேலை செய்யும் பாஜக மோசடி திட்டமான ப்ரீபெய்ட் மின் மீட்டர்களை தங்கள் வீடுகளில் நிறுவ வரும் தனியார் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.  ஆளும் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் அரசு மக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிக்க புரோக்கர் வேலை பார்க்கக் கூடாது. மீறி செய்தால், மக்களைத் திரட்டி மீண்டும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. செய்தியாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், வெ.பெரு மாள், தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ், சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.