பொதுஇடத்தை பாதுகாக்க சிபிஎம் சிபிஐ கையெழுத்து இயக்கம்
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7க்கு உட்பட 85ஆவது வார்டு மங்களபுரம் பகுதியில் உள்ள ஐடிஐ கோச்சார் குடியிருப்புக்கு இடையில் உள்ள பொது இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி, அங்கு சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஆர்.கோபி, எம்.பகத்சிங், எம்.சிவராமன், ஜி.மூர்த்தி, வீரண், எம்.எஸ்.சுதர்சனம், தணிகாசலம் (சிபிஎம்), ஜெகந்நாதன், கருணாகரன், நாகராஜ், ஏசு (சிபிஐ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.