மழையால் சேரும் சகதியுமாக மாறிய கிராமம் மாற்று இடம் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நாமக்கல், அக்.22- கடும் மழையால் சேரும் சகதியுமாக மாறிய இலுப்பிலி கிராமம் குளத்துவலவு மக்க ளுக்கு இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கீடு செய்து வழங்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றி யம் இலுப்பிலி கிராமம் குளத்துவலவு ஊரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியின் அருகில் சுமார் 150 ஏக்கர் இலுப்புலி ஏரி உள்ளது. இதனால் தார் சாலை, காங்கீரிட் சாலை என சாலை வசதிகள் இல்லாமலும் உள்ளது. மண் சுவர்களால் கட்டப்பட்டுள்ள சுவர்கள் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து குடியி ருக்க முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டு வரு கிறது. மேலும் சிறிய குடிசைகள் என்பதால் மழை நீர் ஊற்று நீராக மாறி பல மாதங்க ளாக அப்படியே சேரும் சகதியுமாக மாறிவ ரும் சூழ்நிலை நிரந்தரமாக உருவாகிவிட் டது. இந்நிலையில் மாற்று இடம் வேண்டு மென இப்பகுதி பொதுமக்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்ற னர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இருந்து மேற்கொள் ளப்படவில்லை. இதில் குடியிருந்து வரும் குடும்ப வாரிசுகள் என்ற அடிப்படையில் குடும்பங்கள் பெருகிவரும் நிலையில் இதில் குடியிருக்க முடியாமல் ஊரை விட்டு வெளி யேறும் சூழ்நிலைமையும் உருவாகி உள் ளது. தற்போது கடும் மழையால் இவ்வூர் முழு வதும் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையறிந்து, எலச்சிபாளையம் முன்னாள் கவுன்சிலரும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மேற்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.ரமேஷ். சிறுபான்மை நலக் குழு மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறி னர். இதனையடுத்து, பொதுமக்களிடம் தலை வர்கள் பேசுகையில், உங்களுக்கான கோரிக் கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி கோரிக் கையை வென்றெடுக்கும் என்றனர். மேலும், திருச்செங்கோடு வருவாய் துறை நிர்வா கம் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் இவ்வூரில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
