பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க சட்டமன்ற சிறப்பு அமர்வை கூட்டுக!
உ.வாசுகி வலியுறுத்தல் நாகர்கோவில், ஜுலை 30- பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்கவும் அதைத் தடுக்க வும் சட்டமன்ற சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார். மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 24 முதல் 27 வரை மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி ஜூன் 30 புதனன்று நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உ.வாசுகி மேலும் கூறியதாவது: அண்மையில் குமரி மாவட்டத்தில் ஜெமிலா, திருப்பூரில் ரிதன்யா - என வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. வரதட்ச ணையை தடுப்பதற்கு புதிய சட்டம் தேவை என மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். திரைப்படக் கலைஞர்கள் தங்கள் ரசிகர்கள் வரதட்சணை வாங்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். சிறார் பாதுகாப்பு ஆணையர் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியை அலுவலகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மாநிலம் முழு வதும் சென்று விசாரணை நடத்த வேண் டும். சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வு நடத்தி விவாதிக்க வேண்டும். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளை அழைத்துப்பேசி செயல்திட்டம் உருவாக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக எங்களைப் போன்ற அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. அரசுத் தரப்பிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். தனிச்சட்டம் தேவை சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை. பெண் வீட்டாரே பெண்ணைக் கொல்லும் அளவுக்கு சாதி ஆணவம் உள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்கிற தமிழக அரசின் நிலைபாடு சரியல்ல என்று உ.வாசுகி தெரிவித்தார். சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்கள் குறித்தும் மாதர் சங்கம் குறித்தும் மோசமாக பேசி வரு கிறார். விஜயலட்சுமி பாதிக்கப்பட்ட பெண் என்கிற முறையில் ஜனநாயக மாதர் சங்கம் அவருக்கு உதவுகிறது. ரிதன்யா மரணத்தின்போது மாதர் சங்கத்தினர் குடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் களா என கேட்கிறார் சீமான். ரிதன்யா வீட்டுக்கு முதன் முதலாக சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தது மாதர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான். திருப்பூரில் வலுவான ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த உண்மைகளை மறைத்து சீமான் பேட்டி கொடுக்கிறார். அவரது கட்சிப் பெயரான நாம் தமிழர் என்பதில் பெண்கள் வரமாட்டார்களா?. சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. மூன்று மையங்களில் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் மக்கள் பிரச்ச னைகளை அறிந்துகொண்டு, அவற்றில் தலையிடாமலேயே ஆட்சிக்கு வந்து தீர்வு காண்பேன் என்கிறார். அவரிடம் அதற் கான மந்திரக்கோலா உள்ளது?. நுண் நிதி கட்டுப்பாடு சட்டம் நுண்நிதி நிறுவனங்களின் நெருக் கடியால் பல பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். அதை தடுக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா கொண்டு வந்தார். அதன்மீது சட்டமன்றத் தில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களும், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெறா மலே சட்டமாகி விட்டது. அதை மறுபரி சீலனை செய்து மசோதா மீது தெரிவிக் கப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட வேண்டும். படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித் தது. இப்போது புதிது புதிதாக குடிநோ யாளிகள் உருவாகி வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு குடும் பங்களுக்கு வேலையும் மறுவாழ்வும் அளிக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட வேண்டும். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை அடிப்படை ஆதாரமாக கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. அதன்படி புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் சுமார் 85 லட்சம்பேர் வாக்க ளிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந் துள்ளது. சிறுபான்மையிர், தலித்துக் கள் மற்றும் ஏழைகளை வாக்களிப்பதி லிருந்து விலக்கும் இத்தகு நடவடிக் கைகளை மாதர் சங்கம் எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மார்த்தாண்டத்தில் மாநில மாநாடு மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் அ.ராதிகா கூறுகையில், மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24 அன்று பேரணியுடன் துவங்கி 25,26,27 நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவித் தார். இதில் 41 மாவட்டங்களில் இருந்து 580 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதையொட்டி தமிழகம் முழுவதும் 17 கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை மையப்படுத்தி 5 கருத்த ரங்குகள் நடத்தப்படும். சங்கத்தின் வீர வரலாறு கூறும் எழில்மிகு கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது என்றார். பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் உஷாபாசி, மாவட்டச் செய லாளர் ரெகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.