தொடர் விடுமுறை சென்னையிலிருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
சென்னை, செப்.30 - ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை காரணமாக சென்னை யில் இருந்து சுமார் நான்கு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசித்து வருகின்றனர். இது தமிழக மொத்த மக்கள்தொகையில் எட்டில் ஒரு பங்காகும். சென்னை யில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள். வேலைக் காக இங்கு வந்து தங்கியுள்ளனர். பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் சொந்த ஊர் செல்வது இவர்களின் வழக்கம். அக்.1 (புதன்கிழமை) அன்று ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக் கிறது. அடுத்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை வருகிறது. மேலும், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற் கொண்டு வருகின்றனர். இதற்கு வசதியாக கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளும், சென்ட்ரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் களும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப் படுகின்றன. செப்.30 வரை சிறப்பு பேருந்துகள் மூலம் ஒரு லட்சம் பேரும், சிறப்பு ரயில்கள் மூலம் மூன்று லட்சம் பேரும் என மொத்தம் நான்கு லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஆயுதபூஜையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பு வதற்காகவும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட இருக் கின்றன.
