மதவாத – பெண்கள் விரோத – கார்ப்பரேட் பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்
குழித்துறை, செப்.26 - ஒன்றிய பாஜக அரசு மதவெறி, பெண்கள் விரோதம், கார்ப்பரேட் சுரண்டல் ஆகிய மூன்று கருவிகளின் மூலமாக மக்களை அடக்கி ஆளு கிறது என்றும், அதற்கு எதிரான தொடர் போராட் டங்களை நடத்துவது என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக அரசின் மூன்று அடக்குமுறை கருவிகள் குழித்துறையில் நடைபெற்று வரும் மாநாட் டில், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா முன்மொழிந்த இத்தீர்மானத்தில், பாஜக அரசு சிறுபான்மை மக்களின் உரிமை களை பறித்து மதவெறி அரசியலை தூண்டுவ தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெண் கல்வி, வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்ட சூழலில் பெண்கள் வாழ்ந்து கொண்டிருப்ப தாகவும், பெண்கள் மீதான பாலின அடக்கு முறை அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. விவசாயம், தொழிலாளர் துறை, பொது நிறு வனங்கள் அனைத்தையும் தனியார்–கார்ப்ப ரேட் கைகளில் ஒப்படைத்து மக்களின் வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும், விலை உயர்வு, வேலை இழப்பு, வறுமை ஆகிய வற்றை பெருக்குவதாகவும் தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு நாள்தோறும் உலக அளவிலும், தேசிய-மாநில அளவிலும் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவ தாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதுதொ டர்பான தீர்மானத்தில் குடும்ப வன்முறை, பாலி யல் வன்முறை, பாலினப் பாகுபாடு, அதிகார வன்முறை, பெண் கருக்கொலை, சிசுக்கொலை, சாதி ஆணவ குற்றங்கள், மகப்பேறு வன்முறை போன்ற பல வன்கொடுமைகள் நடந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாவதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப் படுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலி யல் வன்கொடுமைகளில் 90 சதவீதம் தெரிந்த வர்களாலேயே நிகழ்த்தப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023ல் மட்டும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 3,65,100, குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகள் 63,414 பதிவாகியுள்ளன. குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் கடந்த 10 ஆண்டு களில் 93 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மூன்றில் ஒன்று குழந்தை திருமணம் என்பது கவலைக்குரிய விஷயமாகும். கடந்த ஆண்டை விட குழந்தை திருமணங்கள் 50 சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு 1054 குழந்தை திருமணங்க ளும், 2024ஆம் ஆண்டு 1640 குழந்தை திருமணங் களும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. சாதி ஆணவக்கொலைகளை தடுக்க சிறப்புச் சட்ட கோரிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மறுப்பு திரு மணம் செய்த தம்பதிகள் சாதி ஆணவக் கொலை களுக்கு ஆளாவதைத் தடுக்க ஒரு சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் மாநாட்டுத் தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் உயிர்கள் சாதி ஆணவக்கொ லைகளுக்கு பலியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. சாதிய ஆணவக் கொலைகள் தனி நபர்களால் ஏவப்படுவதாக மட்டுமின்றி, பெற்றோர் மீதான சாதிய சமூகத்தின் நிர்பந் தம், சாதி ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல், கட்டப் பஞ்சாயத்து, கௌரவம், சாதி தூய்மை என்கிற கருத்தாக்கம் ஆகியவை இவற்றின் பின்புலமாக உள்ளன. பெண்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மாநாட்டில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி கையாளுவதற்கான வகுப்பு களை காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு நடத்திட வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு பாலின சமத்து வம் குறித்த வகுப்புகளை அரசே நடத்திட வேண் டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலியல் கல்வி குறித்தும் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில், பணியிடங்களில், உள்புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்றும் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு அடிப் படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தி குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூபாய் 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யும் முன்வைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத் துவம், போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெடுப்பு களையும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடத் திடவும், மதவாத–பெண்கள் விரோத–கார்ப்ப ரேட் பாஜக அரசை தோற்கடிக்க அனைத்துபெண் கள் இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.