கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், டிச.10 - ஓய்வூதியம் ரூ.6000 என்பதை சட்ட மாக்க வேண்டும். விண் ணப்பித்த அனைவருக் கும் வீடு கொடுக்க வேண்டும். வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கட்டு மானத் தொழிலாளர்கள் (ஏஐடியுசி) சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்டச் செயலா ளர் கல்யாணி தலைமை வகித்தார். சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கோரிக்கை
பாபநாசம், டிச.10 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி 60 ஆண்டுகளைக் கடந்தது. இப்பள்ளியில் மெலட்டூர், இதன் அருகில் உள்ள அத்துவானப்பட்டி, கரம்பை, கோவத்தகுடி, நரசிங்கமங்கலம், நரி யனூர், கோணியக் குறிச்சி, காட்டுக்குறிச்சி, வேப்பங்குளம், கோடு கிளி, சோலை பூஞ்சேரி, மாங்குடி, சங்கராம் பேட்டை உள்ளிட்ட கிரா மங்களைச் சேர்ந்த 480- க்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கின்றனர். 28 ஆசிரியர்கள் பணிபுரி கின்றனர். இப்பள்ளி மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீர் தேவையுள்ளது. பெரும்பாலும் பொருளா தாரத்தில் பின் தங்கிய மாணவர்களே, இப்பள்ளி யில் பயில்வதால், அவர்களின் நலன் கருதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட மாண வர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ள னர்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
பாபநாசம், டிச.10 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி மகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசி ரியர் அன்பழகன் முன் னிலை வகித்தார். இதில் மாற்றுத் திற னாளி மாணவர்களை மருத்துவ மதிப்பீட்டு முகாமில் பங்கேற்கச் செய்வது, மாணவர் களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது, ஆட்டிசம் குழந்தைகளை இனம் கண்டு, மருத்துவ உதவி பெறச் செய்வது, பள்ளிக்கு வராத மாண வர்களை வீடு தேடிச் சென்று அழைத்து வரு வது உள்ளிட்டத் தீர்மா னங்கள் நிறைவேறின. இதில் பள்ளி மேலாண் மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பிரதிநிதி ஜெயந்தி நன்றி கூறினார்.
கழிவுநீராக மாறிய மழை நீர்: வேம்பனூர் பகுதி மக்கள் அவதி
திருவாரூர், டிச.10 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மஞ்சகுடி ஊராட்சி, வேம்பனூர் ஆதிதிராவிட தெருவில் மழைநீர் தேங்கி நோய்தொற்று ஏற்படும் நிலையில் சுகாதாரம் வசதியின்றி மக்கள் வசிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின் கோரிக்கை விடுத்துள்ளார். வேம்பனூர் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மூன்று பகுதியாக சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தத் தெருவில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழை நீர் பல இடங்களில் தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை செயல்படாமல் உள்ளது. பொது கழிவறையை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குப்பை மேடாக உள்ளது. ஆகவே குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆய்வு செய்த போது ஒன்றியக் குழு உறுப்பினர் வீ.பன்னீர் மற்றும் கிளை செயலாளர் உள்ளிட்டேர் உடனிருந்தனர்.
இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
தஞ்சாவூர்/கரூர், டிச.10 - 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங் களுக்கான முதற்கட்ட சரிபார்ப்பு பணி பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் 11.12.2025 (வியாழக் கிழமை) முதல் அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதி களின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேற் பார்வையில் மேற்கொள்ளப்பட வுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் அமையப் பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் உள்ள எஃப்.எல்.சி அறையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களுக்கான முதற்கட்ட சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார். கரூர் கரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி டிச.11 முதல் நடைபெற உள்ளது தொடர்பாக அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் செவ்வாயன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் டிச.11 அன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெங்களுரூ BEl நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரி பார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி நடைபெறும் தினங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பாக பிரமுகர் ஒருவரை பரிந்துரைக்கும் படியும், பரிந்துரைக்கப்படும் பிரமுகர் இப்பணி முடியும் நாட்கள் வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை வைப்பறையில் இருக்க வேண்டும். இப்பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது Mock Poll செய்திடவும், முதல் நிலை சரி பார்ப்பு பணியில் பழுதானது என கண்ட றியப்படும் இயந்திரங்கள் பெங்களூரு BEl நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் படும் என்றும், முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்குமாறும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தெரிவித்துள்ளார்.