tamilnadu

img

என்டிஏ கூட்டணிக்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

என்டிஏ கூட்டணிக்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 15 - தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் மறுக்கப்படு வதும், வளைகுடா போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் தமிழக மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெ.சண்முகம்  காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டன உரையாற்றினார். திமுக மாவட்டச் செயலாளர் க.சந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழில்லரசன், மக்களவை உறுப்பினர் செல்லம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பத்தூரில் பகுதிச் செயலாளர் இரா.விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் மூ.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் மூ.வரதன், நிர்வாகிகள் ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன், ஆர்.துரைசாமி, லோகேஷ், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநில முழுவதும் ஏராள மான மையங்களில் பெருந்திரளானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.