tamilnadu

img

நவ கேரளம் 3.0 மக்கள் நலன் காக்கக் களம் காணும் இடதுஜனநாயக முன்னணி சிபிஐ(எம்) வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நவ கேரளம் 3.0 மக்கள் நலன் காக்கக் களம் காணும் இடதுஜனநாயக முன்னணி சிபிஐ(எம்) வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருவனந்தபுரம், மார்ச் 15 - கேரளாவின் முற்போக்கான வளர்ச்சிப் பாதையை அடுத்த கட்டத் திற்கு எடுத்துச் செல்லும் ‘நவகேர ளம்’ பயணத்தை வலுப்படுத்தும் வகையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மக்கள் நலன் சார்ந்த வேட்பாளர் பட்டியலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கட்சியின் மாநிலச் செயலா ளர் எம்.வி. கோவிந்தன் முதற்கட்ட மாக இடதுஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் 81 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார். அனுபவமும் துடிப்பும் இணைந்த கூட்டணி இடதுசாரி இயக்கத்தின் அடிப்ப டை விழுமியங்களான சமூக நீதி, மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த  வேட்பாளர் பட்டியல் அமைந்துள் ளது.  அனுபவம் வாய்ந்த தலை வர்கள், அமைச்சர்கள், அடிமட்டத் தில் பணியாற்றும் தோழர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக உல கத்தரம் வாய்ந்த நலத்திட்டங் களை முன்னெடுத்து வரும் முத லமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார். இவருடன் இந்திய கால்பந்து வரலாற்றில் முத்திரை பதித்த யு. ஷரப் அலி (சுயேச்சை) போன்ற விளையாட்டு வீரர்களும் களம் இறக்கப்பட்டிருப்பது, இடது ஜனநாயக முன்னணிக்கு இருக்கும் பரந்த சமூக ஆதரவைக் காட்டுகிறது. பட்டியலின் முக்கிய அம்சங்கள்: மொத்த வேட்பாளர்கள்: முதற்கட்டமாக 81 பேர் அறிவிக்கப் பட்டுள்ளனர். இதில் இடது ஜனநா யக முன்னணி (LDF) ஆதரவு பெற்ற 6 சுயேச்சைகளும் அடங்குவர். தொடர்ச்சி மற்றும் நம்பிக்கை: நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக 11 அமைச்சர்கள் மற்றும் 54 தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். தலைமையில் இருந்து : ஒரு அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் (முதலமைச்சர் பினராயி விஜயன்), 4 மத்தியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் 4 மாநில செயற்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய குழு உறுப்பினர்கள்: கே.கே. சைலஜா (பேராவூர்), கே.என். பாலகோபால் (கொட்டாரக் கரை), பி. ராஜீவ் (களமசேரி) மற்றும் டி.பி.ராமகிருஷ்ணன் (பேரம்பிரா). மாநில செயற்குழு உறுப்பினர்கள்: பி.ஏ. முகமது ரியாஸ் (பேப்பூர்), வி.என். வாசவன் (ஏற்றுமானூர்), சஜி செரியன் (செங் ஙன்னூர்) மற்றும் கே.கே. ஜெயச் சந்திரன் (உடும்பன்சோலை). கொடுவள்ளி, கோட்டக்கல், கொண்டோட்டி, திரூர் மற்றும்  பாலக்காடு ஆகிய 5 தொகுதி களுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.