மேற்கு வங்கத்தின் புதிய தலைமை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துஷ்யந்த் நரியலாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அம்மாநில தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறைச் செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோரை தேர்தல் ஆணையம் அப்பதவிகளிலிருந்து நீக்கியது. இதை தொடர்ந்து, புதிய தலைமை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துஷ்யந்த் நரியலாவையும், உள்துறை முதன்மைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கமித்ரா கோஷையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவு (152 தொகுதிகள்) ஏப்ரல் 23 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (142 தொகுதிகள்) ஏப்ரல் 29 அன்றும் நடைபெறும். இங்கும் வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
