மண்டலம் 5இல் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
சென்னை, ஜூலை 11- மாநகராட்சி நகர விற்பனை குழு தேர்த லில் மண்டலம் 5இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேருக்கும் சென்னை மாநகராட்சி எம்.சி. ரோடு வணிக வளாக சிறுகடை வியா பாரிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா வும், வாக்களித்த வியாபாரிகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் நடைபெற்றது. முன்னதாக சிந்தனை சிற்பி சிங்கார வேலர் ராயபுரம் சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், மாவட்ட செயல் தலைவர் கே.பலராமன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணை செயலாளர் முஸ்தபா, வணிக வளாக வியாபாரிகள் சங்க நிர்வாகி கள் கே.செல்வானந்தம், எஸ்.காசிம், எஸ்.பாலைய்யா, ராயபுரம் சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கத்தின் செய லாளர் பா.பாக்கியலட்சுமி, பொருளாளர் என்.முகமது ரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.