tamilnadu

img

வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு

வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு

மாநில அளவிலான ரோல்பால் போட்டி

சின்னாளப்பட்டி, ஆக.6- மாநில அளவிலான ரோல்  பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  11 வயதுக்கு உட்பட்டோருக்கு தஞ்சா வூரிலும், 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கு திருச்சியிலும் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.  திண்டுக்கல் மாவட்ட அணி 17 வயது பெண்கள் பிரிவில் முத லிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்று  சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதே பிரிவில் ஆண்கள் அணி 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை பெற்றது.  இதேபோல் 11 வயது உட்பட்டோ ருக்கான பெண்கள் பிரிவு அணி 2 இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றது.  வெற்றி பெற்ற 3 அணி வீரர் களுக்கும் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பயிற்சியாளர் மாஸ்டர் பிரேம்நாத் மற்றும் பயிற்றுநர்கள் தங்கலட்சுமி, சக்திவேல், கல் யாண், ராஜதுரை, ராம்கவி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.