தோழர் வி.சகுந்தலா படத்திறப்பு
திருவாரூர், ஜூலை 11- திருவாரூர் ஒன்றியம், தப்பளாம்புலியூர் ஊராட்சி, பல்லவபுரம் கிராமத்தில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளருமான வி. கஜேந்திரனின் தாயார் வி. சகுந்தலா படத்திறப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா தலைமை தாங்கினார். தோழர் சகுந்தலா உருவப் படத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். முன்னதாக சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். மாலதி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் என். நடராஜன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்வில், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. இளையராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். கோசிமணி உள்ளிட்ட வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.