tamilnadu

img

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழர் எஸ்.பெரியசாமி நூற்றாண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழர் எஸ்.பெரியசாமி நூற்றாண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.24- சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம், விசைத்தறி தொழிலாளர் சங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிஐடியு ஒருங்கிணைப்பு குழு சார்பில், பட்டினி பட்டாள பாத யாத்திரை சென்ற தோழர் எஸ். பெரியசாமி அவர்களின் நூற் றாண்டு விழா மற்றும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன் எழுதிய “பட்டினி பட்டா ளம் – பாதயாத்திரை போராட்டத்  தலைவர் தோழர் எஸ்.பெரியசாமி  வாழ்க்கை வரலாறு” நூல் வெளி யீட்டு விழா திருவில்லிபுத்தூர் மாரி யம்மன் கோயில் தெருவில் நடை பெற்றது. விழாவிற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.திருமலை  தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜி.சந்தனம், மாவட்ட குழு உறுப்பினர் வீரசதா னந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரையை எம். பிச்சைக்கனி வழங்கினார். சிஐடியு மாநில தலைவ ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான அ.சவுந்தரராசன் நூலை  வெளியிட, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமி, பெரிய சாமியின் மகன்கள் பாக்கியநாதன், இளங்கோ, மகள் காளியாய் ஆனந்தம், சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த பிள்ளையார், கட்சியின் ஒன்றியச் செயலாளர் சசிகுமார், நகரச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முனைவர் ஸ்ரீலட்சுமணன்  கவிதை வாசித்தார். கைத்தறி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார் கருத்துரையாற்றினார். நூலாசிரி யர் கே.அர்ஜுனன் ஏற்புரை நிகழ்த்தினார். திருவில்லிபுத்தூர் பகுதி தலைவர் லட்சுமணன் நன்றி  கூறினார். விழாவில் தமிழ்நாடு விசைத்  தறி தொழிலாளர்கள் சம்மேளன மாநில தலைவர் சோமசுந்தரம், சிஐ டியு மாவட்ட துணைத் தலை வர்கள் கணேசன், வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.சாராள், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனியாண்டி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புயல் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.