tamilnadu

img

தோழர் பி. ராமமூர்த்தி 117ஆவது பிறந்த தினம்: சிபிஎம் தலைவர்கள் மரியாதை

தோழர் பி. ராமமூர்த்தி 117ஆவது பிறந்த தினம்: சிபிஎம் தலைவர்கள் மரியாதை

சென்னை, செப்.20 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தின தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் பி. ராமமூர்த்தி அவர்களின் 117ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை (செப்.20) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் நிறுவப்பட்டுள்ள தோழர் பி.ராமமூர்த்தியின் உரு வச்சிலைக்கு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, அவரது தியாகங்களையும், போராட்ட வாழ்க்கையையும் தலை வர்கள் நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. சுவாமிநாதன், மூத்த வழக்கறிஞரும் தோழர் பி.ஆர். அவர்களின் மகளுமான ஆர்.வைகை, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், தோ.வில்சன், க.சரவணன் மற்றும் மாநிலக்குழு அலுவலக தோழர்கள் கலந்து கொண்டனர்.