tamilnadu

img

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக நீக்குக!

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக நீக்குக

சென்னை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, செப். 22 - மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி-யை  முழுமையாக நீக்கக் கோரி திங்க ளன்று (செப்.22) சென்னையில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை  பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட துணை போகும் ஒன்றிய அரசின் மருந்து  விலைக் கொள்கையில் மாற்றம்  கொண்டு வர வேண்டும். பொதுத் துறை மருந்து நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட்டு, அவற்றை புனரமைக்க வேண்டும். மருந்து நிறுவனத்தின் வியா பார இலக்கை எட்ட முடியாத விற்பனை பிரதிநிதிகளை பணி நீக்கம், வெளி மாநிலங்களுக்கு இடம்  மாறுதல், ஊதிய வெட்டு என பழி வாங்குகின்றனர். இதனை தடுக்க வும், கடுமையான பணிச்சுமையி லிருந்து பாதுகாக்கவும் நிலையான வேலை விதிமுறைகளை உருவாக்க வும் வேண்டும். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான விற்பனை அபிவிருத்தி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மின்னணு சாதனங்கள் மூலம் தனி மனித உரிமை மீதான கண்காணிப்பு மற்றும் ஊடுருவலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாநில அள வில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக, சென்னை யில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தின் மாநிலத் தலைவர் பி.சத்திய  நாராயணன், “சந்தையில் எந்த  மருந்துகள் அதிகமாக விற்கிறதோ,  அந்த மருந்துகளின் சராசரி விலையை விலையாக நிர்ணயிக்க லாம் என முடிவெடுத்துள்ளனர். இது நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மக்களுக்கு துயரமாகவும் மாறு கிறது. இதனை எதிர்க்கிறோம். நிறுவனங்களின் லாபத்தை கட்டுப்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளை வழங்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டியை முழுமையாக நீக்குவதன் மூலம் மருந்துகளின் விலையை மேலும் குறைக்க முடியும். 2017ல் முத்தரப்புக் குழு அமைக் கப்பட்டு, சட்டப்பூர்வமான வேலை  விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவை முழுமையாக நிறு வனங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆதலால் முத்தரப்புக்குழு கூட்டத்தை  மீண்டும் நடத்தி பரிந்துரைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்தக்  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில  இந்திய அளவில் நவ.17 அன்று மும்பையிலும், நவ.18  அன்று நாடாளுமன்றம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.  இந்தப் போராட்டத்தை சிஐடியு  மாநில துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன் தொடங்கி வைத்தார். மருந்து மற்றும் விற்பனை  பிரதிநிதிகள் அகில இந்திய சம்மே ளன செயலாளர் வாசு, சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், மாவட்டச் செயலாளர்கள் வி.குப்புசாமி (வடசென்னை), ஜி. செந்தில்குமார் (தென் சென்னை),  மத்திய சென்னை மாவட்ட பொரு ளாளர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை ஆதரித்து பேசி னர். சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜி.விவேகானந்தன் நிறைவுரை